ஜெகன் மோகன் ரெட்டி ஒரு சைக்கோ-சந்திரபாபு நாயுடு தாக்கு

சென்னை, அக்டோபர்-12

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒரு சைக்கோ போல் நடந்து கொள்வதாக முன்னாள் முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு முதன்முறையாக விசாகப்பட்டினம் சென்ற தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, கட்சி ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒய்.எஸ்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு, மக்களுக்கு எதிரான கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருவதாகக் கூறினார். நல்லவர்களுக்கு நல்லவராக தாம் திகழ்ந்ததாகவும் ஆனால் ஜெகன் மோகனோ சைக்கோ போல் நடந்து கொள்வதாகவும் சாடினார். இந்த ஆட்சி மிகவும் மோசமாக உள்ளதாகக் குற்றம்சாட்டிய சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகனைப் போன்ற மோசமான முதலமைச்சரைப் பார்த்ததில்லை என்றும் தெரிவித்தார். ஆணவப்போக்கான அணுகுமுறையை ஜெகன் மோகன் அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், தங்கள் கட்சிப் பிரமுகர்களைக் குறிவைப்பது நியாயமல்ல என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *