ஹிந்தியை மொழிபெயர்த்தேனா?.. முடிந்தால் நிரூபியுங்கள் – கனிமொழி எம்.பி. சவால்..!

எந்த பொதுமேடையிலும் நான் ஹிந்தி மொழி பெயர்த்ததே இல்லை.. அப்படி மொழி பெயர்த்திருந்தால் நிரூபியுங்கள் என ஹிந்தி மொழிபெயர்ப்பு குறித்த சர்ச்சைக்கு கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-12

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. கனிமொழி கூறியதாவது ;-

சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் அதிகளவில் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ‘ஹிந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்பது எவ்வளவு பெரிய அவமானம். நான் டெல்லிக்குச் சென்று இத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஹிந்தி எனக்குத் தெரியாது. அதனை நான் கற்றுக்கொள்ளவில்லை, இதுவரை எந்த மொழிபெயர்ப்பும் நான் செய்யவில்லை. நான் படித்த பள்ளியில் தமிழ், ஆங்கிலம் தான் இருந்தது. அந்த இரண்டு மொழிகள் மட்டுமே எனக்குத் தெரியும். ஆங்கிலத்தில் இருந்து கூட தமிழில் மொழிபெயர்த்ததாக எனக்கு நியாபகம் இல்லை. ஹிந்தி தெரிந்தால் தானே மொழி பெயர்க்க முடியும். அப்படி மொழிபெயர்ப்பித்திருந்தால் நிரூபியுங்கள்.
மாறாக, யாருக்கு ஹிந்தி தெரியும் என்றில்லாமல், ஒரு குறிப்பிட்ட மதத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைமுறையை அல்லது ஒரு குறிப்பிட்ட கருத்தியலை பின்பற்றினால்தான் இந்தியாவில் இருக்க முடியும் என்பதைத்தான் கண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் போட்டி என்று கூறிய பாஜக நிர்வாகி வி.பி. துரைசாமிக்கு பதில் அளித்துள்ள திமுக எம்.பி கனிமொழி யார் வேண்டுமானாலும் கனவு காணலாம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *