தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.355 கோடி நிதி ஒதுக்கீடு

15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்திற்கு ரூ.335 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

டெல்லி, ஆகஸ்ட்-11

கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி உதவும் என்று நிதி ஒதுக்கீடு பற்றிய தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 15வது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்துக்கு ரூ.355 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட 14 மாநிலங்களுக்கு ரூ.6,196 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதில் அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276 கோடியும், ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.952 கோடியும் மத்திய அரசு விடுவித்துள்ளது. மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கான மானியமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *