கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-11

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக பாசனத்திற்கு 12.8.2020 முதல் 9.12.2020 வரை 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் இரு பிரதானக் கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தில் உள்ள 8000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென்றும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *