கோவையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைள் தீவிரம்…

கோவை, அக்டோபர்-12

கோவை நகரில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரப்படுத்தபட்டுள்ளன.

கோவையில் வருமுன் காப்பதே சிறந்தது என்பதற்கேற்ப, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.  கொசுப்புழுக்களை ஒழிக்க வீடு வீடாக சென்று மருந்து தெளித்தல், வீடுகளில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை ஒட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளானர். மேலும் கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் உத்தரவின் பேரில் கொசுப்புழுக்களை அழிக்க ‘அபேட்’ மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கைகளிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கோவையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாநகராட்சி மருத்துவ அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத் கேட்டுக்கொண்டார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *