அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை.. அமைச்சர் செங்கோட்டையன்

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1,6,9-ம் வகுப்புக்கு ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேல்நிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 24-ம் தேதி முதல் நடைபெற உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை:, ஆகஸ்ட்-11

இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஆக.24ந்தேதி முதல் தொடங்கப்படும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை. ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாறும் 2 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக.17 முதல் சேர்க்கை நடைபெறும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளன்றே இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும். இலவச கல்வி உரிமை சட்டத்தில் எல்கேஜி, 1ம் வகுப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் பெற்றோர் விண்ணப்பிக்க மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். கொரோனா சூழலில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சாத்தியமே இல்லை. கொரோனா தாக்கம் குறைந்தபின்னரே பள்ளிகள் திறப்பு பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *