சென்னையில் இருந்து புறப்பட்டார் ஜின்பிங்க்…

சென்னை, அக்டோபர்-12

தனது இரு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்க் நேபாளம் புறப்பட்டார்.

பிரதமர் மோடி –சீன அதிபர் ஜி ஜின்பிங்க் இடையேயான இரண்டு நாள் முறைசாரா உச்சிமாநாடு சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில், கலந்துகொள்வதற்காக வந்திருந்த ஜி-க்கு சென்னை முழுவதும் மேளதாளம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு சாலை மார்க்கமாக கோவளத்தில் இருந்து ஜின்பிங்க் விமான நிலையம் வந்தார். அங்கு, ஜின்பிங்கை, தமிழக ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *