தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து ரூ.42,512க்கு விற்பனை..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து ரூ.42,512க்கு விற்பனையாகிறது.
சென்னை, ஆகஸ்ட்-11

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து ரூ.42,512க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.51 குறைந்து ரூ.5,314க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 உயர்ந்து ரூ.84.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சற்று குறைந்து வருகிறது. கடந்த 8-ம் தேதி தங்கத்தின் விலை சற்று குறைந்து. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.288 குறைந்து ஒரு சவரன் ரூ.43,040க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலை மாற்றமில்லாமல் நேற்று முன்தினம் விலையில் விற்பனையானது. இந்நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. தங்கத்தின் விலை 2 வது நாளாக குறைந்து வருவது நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.