10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை..!

கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி 10 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

டெல்லி, ஆகஸ்ட்-11

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீ போல பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்பட 10 மாநிலங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இன்று இந்த 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *