வேட்டி, சட்டை அணிந்த பிரதமருக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு

சென்னை, அக்டோபர்-12

தமிழரின் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங்குடன் மாமல்லபுரத்தை பார்வையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாமல்லபுரம் வந்திறங்கிய பிரதமர் மோடி தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து வந்தார். பிரதமரின் இந்த தோற்றம் அணைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. 

இந்நிலையில், தமிழர் பாரம்பரிய உடை அணிந்த மாண்புமிகு பிரதமர் மோடிக்கு என் பாராட்டுக்கள் என்றும் கடந்த காலங்களில் எந்தவொரு பிரதமரும் தமிழ் பண்பாட்டை இந்தளவுக்கு அங்கீகரித்தது கிடையாது எனவும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *