முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி, ஆகஸ்ட்-10

இது குறித்து அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது, உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது, அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் மற்றும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்திக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.