தமிழக சகோதர, சகோதரிகளுக்கு நன்றி-பிரதமர் மோடி

சென்னை, அக்டோபர்-12

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்க் இடையேயான முறைசாரா உச்சிமாநாடு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொள்ள வந்த ஜி ஜின்பிங்கிற்கு தமிழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இருநாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தின் புராதான சின்னங்களை பார்வையிட்டபடியும், கடற்கரை அழகை ரசித்தபடியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில், இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, முறைசாரா உச்சிமாநாட்டிற்காக தமிழகம் வந்த ஜி ஜின்பிங்கிற்கு நன்றி கூறுவதாகவும், இந்த சந்திப்பு இருநாட்டு மக்களுக்கு உந்து சக்தியாக இருக்கும் என்றும் மோடி தெரிவித்திருந்தார். இரு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்க் நேபாளத்திற்கு புறப்பட்டுச் சென்றார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடியும் டெல்லி புறப்பட்டார்.

இதற்கிடையே, தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டரில்,”தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும். மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கும் நன்றி.” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *