சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மரணம்

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் மரணம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு எஸ்.ஐ. பால்துரை கொரோனா தொற்றால் மதுரை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மதுரை, ஆகஸ்ட்-10

சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் இருந்தநிலையில் கடந்த 24ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் பால்துரையின் மனைவி மங்கயர்திலகம் தனது கணவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி நேற்று முன்தினம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த நிலையில் அவருக்கு சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில், சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *