கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதி..!

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு, ஆகஸ்ட்-9

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று எனக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததை அடுத்து செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன், சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *