அமைச்சர் S.P.வேலுமணியிடம் நேரில் வாழ்த்து பெற்றார், IAS தேர்வில் வென்ற பூர்ண சுந்தரி..!

கோவை, ஆகஸ்ட்-8

மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்ந்த பார்வையிழந்த மாணவி பூர்ணசுந்தரி கோவையில் உள்ள அம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் 286 வது இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இவர் இன்று தமது பெற்றோருடன் கோவையில் தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும் கோவை அம்மா IAS அகடாடமியின் தலைவருமான எஸ் பி அன்பரசன் ஆகியோரை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.

இந்த சந்திப்பு பற்றி கூறிய பூர்ணசுந்தரி , இது என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாளாக உள்ளது. ஒரு அமைச்சர் இவ்வளவு எளிமையாக இருப்பார் என்று என்னால் கனவிலும் நினைத்து பார்க்கமுடியவில்லை. என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மாணவி பூர்ண சுந்தரியிடம் தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ். பி வேலுமணி கூறும் போது, இது உங்களின் உழைப்புக்கும், முயற்சிக்கும் கிடைத்த வெற்றி, உங்களை போன்ற மாணவர்கள் இந்திய அளவில் மிகப்பெரிய பொறுப்புகளை அலங்கரிக்க வேண்டும். உங்களை போன்ற மாணவர்களுக்கு எப்போதும் உதவ தயாராக இருக்கின்றேன். நீங்கள் மற்ற மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும், உத்வேகமாகவும் திகழ்கிறீர்கள். எல்லாவளமும் பெற்று வாழ்வில் சாதனை படைக்க வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *