இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20,88,611 ஆக உயர்வு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20.88 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 14.27 லட்சத்தை தாண்டியது.

டெல்லி, ஆகஸ்ட்-8

மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் 61,537 பேர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 20,88,611 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,19,088 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,14,27,005 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் மேலும் 933 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 42,518 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 68.32% ஆக உயர்ந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 2.04% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் விகிதம் 29.64% ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *