இந்தியாவில் 225 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி …! சீரம் நிறுவனம் தகவல்

டெல்லி, ஆகஸ்ட்-8

இது தொடர்பாக சீரம் மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ரூ.225 விலையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டவுடன் அதை 10 கோடி எண்ணிக்கையில் தயாரித்து இந்தியாவுக்கும் மற்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கும் வழங்குவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் சீரம் மையம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஏழ்மை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 92 நாடுகளுக்கும் கரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் நோக்கில் பில் மற்றும் மெலிண்டா அறக்கட்டளை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அந்நாடுகளுக்குத் தடுப்பு மருந்தை தயாரித்து வழங்குவதற்காக சீரம் மையத்துக்கு ரூ.1,125 கோடியை அந்த அறக்கட்டளை வழங்கவுள்ளது.

அஸ்த்ரா ஜெனிகா, நோவாவேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகள் பரிசோதனை நிலையை எட்டியுள்ளன. அவற்றை சீரம் மையத்தில் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த பிறகு அதற்கான உற்பத்தி தொடங்கும். அத்தடுப்பு மருந்தானது அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் நோக்கில் அதன் விலை தலா ரூ.225-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டின் முதல் பாதிக்குள் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு வழங்கப்படும் என்று நம்புகிறோம். நிமோனியா காய்ச்சல், தட்டம்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சா்வதேச மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து தடுப்பு மருந்தை அதிக அளவில் தயாரித்த பெருமை சீரம் மையத்துக்கு உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *