நீலகிரியில் மழை பாதிப்பு…மக்களுக்கு அமைச்சர் S.P. வேலுமணி நிவாரண உதவி
நீலகிரி, ஆகஸ்ட்-7

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு உடமைகள் பாதிக்கப்பட்ட நிலையில், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் உத்தரவின் அடிப்படையில் மாண்புமிகு அமைச்சர் திரு எஸ் பி வேலுமணி அவர்களும் மாண்புமிகு அமைச்சர் திரு உடுமலை கே ராதாகிருஷ்ணன் அவர்களும் இன்று நீலகிரி மாவட்டத்தில் அத்திப்பாலி என்ற பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை அமைச்சர் பெருமக்கள் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு தேவையான உணவு தங்கும் வசதி குழந்தைகளுக்கு தேவையான பால் உள்ளிட்ட பொருட்களை வழங்கிட நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் திரு எஸ் பி வேலுமணி அவர்கள் உத்தரவிட்டார்.


தொடர்ந்து முகாமில் தங்கியுள்ள பொதுமக்களிடம் அமைச்சர் அவர்கள் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிட பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவில் சீரமைக்க தமிழக முதல்வர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எங்களை நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பி உள்ளார் உங்களுக்கு தேவையான எல்லா உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட நிர்வாகமும் வழங்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் அரசால் விரைவில் சீரமைப்பு செய்து விரைவில் உங்களிடம் ஒப்படைக்கப்படும் என்றார். தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மாண்புமிகு அமைச்சர்கள் திரு எஸ் பி வேலுமணி அவர்கள் திரு உடுமலை கே ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர் இந்நிகழ்வில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் சட்டமன்ற உறுப்பினர்கள் நீலகிரி மாவட்ட கழக செயலாளர் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் சென்றனர்.