இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக்கொள்கை அவசியம்.. பிரதமர் மோடி

இந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கும் வளர்ச்சியை அதிகரிக்கவும் புதிய கல்விக்கொள்கை அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி, ஆகஸ்ட்-7

‘தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் மாற்றத்தக்க சீர்திருத்தங்கள்’ குறித்து காணொலி வாயிலாக நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது ;-

பல ஆண்டுக்கு ஆய்வுக்குப் பிறகே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. அனைத்துத் தரப்புகளின் கருத்துகல்ளை கேட்டபிறகே புதிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட்டட்து.
புதிய கல்விக் கொள்கையில் எந்தப் பாகுபாடும் இல்லை. கல்விக் கொள்கையை அமல்படுத்துவது சவாலான பணியாக இருக்கும்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி கொள்கை குறித்து கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். கல்விக் கொள்கை மிக பெரிய சீர்திருத்தத்தைக் கண்டு சிலருக்கு வருத்தம். இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க, வளர்ச்சியை அதிகரிக்க புதிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்தது. முன்னேறி செல்ல சீர்திருத்தமே ஒரே வழி. எதிர்காலத்துக்கு இளைஞர்கள் தயாராக உள்ளனர்.

ஆரோக்கியமான விவாதங்கள் கல்வித்துறையை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்லும். மாணவர்களின் கற்பனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.தாய்மொழி கல்வி மூலம் மாணவர்களின் அடித்தளம் சிறப்பாக இருக்கும். மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி இருக்க வேண்டும்.
முழுமையான கல்வி என்பதே தற்போதைய தேவை. அதற்காகவே புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. மாற்றத்தை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு தயாராக இருக்க வேண்டும்.கல்வியின் சிறந்த நோக்கமே மனிதர்களை உருவாக்குவது தான் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச குடிமகன்களாக இருக்க வேண்டும். ஆனால் நமது வேர்களை மறக்கக் கூடாது. 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைப்பதற்காகவே தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை மூலம் கல்வி முறை வலுப்பெறும். நமது கல்வி முறை சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும். பாதியில் படிப்பை நிறுத்தியவர்கள் புதிய கல்விக் கொள்கையால் படிப்பை தொடரலாம். மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்த தேவையில்லை.

இவ்வாறு மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *