இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20.27 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 13.78 லட்சத்தை தாண்டியது.
டெல்லி, ஆகஸ்ட்-7

இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. நாட்டில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 62,538 பேர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 20,27,074 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 6,07,384 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,13,78,105 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஒரே நாளில் மேலும் 886 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. இதனால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 41,585 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 67.98% ஆக உயர்ந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 2.05% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் விகிதம் 29.96% ஆக உள்ளது.