கருணாநிதி 2ம் ஆண்டு நினைவு தினம்.. மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.!!!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினத்தில், சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை, ஆகஸ்ட்-7

முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன், திமுக பொருளாளர் துரை முருகன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரும் மெரினா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.