ஜின்பிங்கின் முகம் பொறித்த பட்டாடையை பரிசளித்தார் மோடி

சென்னை, அக்டோபர்-12

சீன அதிபர் உருவம் பொறித்த சிறுமுகை பட்டை, சீன அதிபர் ஜி ஜின்பிங்க்கு பரிசளித்தார், பிரதமர் மோடி.

சென்னை கிண்டியில் இருந்து கோவளத்துக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  சாலை வழியே கோவளம் சென்றைடந்த சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்றார். பேட்டரி கார் மூலம், ஓட்டல் வளாகத்தை சுற்றி பார்த்தனர். தொடர்ந்து, கடற்கரை கண்ணாடி அருகே, இருவரும் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தினர்.

பின்பு, கடற்கரையின் எழில்மிகு அழகை சீன அதிபருக்கு பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இந்த ஆலோசனையை தொடர்ந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உயர்மட்ட பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

தொடர்ந்து   சீன அதிபரிடம், காஞ்சி பட்டு நெய்வது (தறி), குத்து விளக்கு, கைவினைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி விளக்கினார். சீன அதிபருக்கு அவரது முகம் பொறித்த பட்டாடையை பிரதமர் மோடி பரிசாக அளித்தார். தன்னுடைய முகம் பொறித்த பட்டாடையைக் கண்டு சீன அதிபர் நெகிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *