தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 110 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை, ஆகஸ்ட்-6

தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,091 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,79,144 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய செய்திக் குறிப்பில் 110 பேர் (அரசு மருத்துவமனை -88, தனியார் மருத்துவமனை -22) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 4,571 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று மேலும் 6,272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,21,087 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 53,486 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 67,153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 30,20,714 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.