இ-பாஸ் வழங்க மாவட்டந்தோறும் 2 குழுக்கள்.. முதல்வர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை எளிமையாக்கும் வகையில் மாவட்டந்தோறும் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல், ஆகஸ்ட்-6

திண்டுக்கல்லில் இன்று நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் இ-பாஸ் பெறும் நடைமுறை எளிமையாக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இ-பாஸ் வழங்க ஒரு குழு மட்டுமே இருந்த நிலையில், தற்போது மாவட்டந்தோறும் இரு குழுக்கள் அமைக்கப்ட்டுள்ளது. அவசியத் தேவைகளுக்கு இ-பாஸ் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, மாதம் ஒருமுறை இ-பாஸை புதுப்பித்தால் போதுமானது. வெளி மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களை தமிழகம் அழைத்து வரத் தடையில்லை. எனினும், மக்கள் இ-பாஸை அவசியத் தேவைகளுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அவசியம்’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *