ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.. ரிசர்வ் வங்கி

ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

டெல்லி, ஆகஸ்ட்-6

வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கைக் குழு கூட்டம் நடைபெறும். அதன்படி, ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாணயக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில் தற்போதைய சந்தை நிலவரம், பணவீக்கம் உள்ளிட்ட காரணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் நிறைவடைந்த நிலையில், கூட்டத்துக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர், ‘ரெப்போ ரேட் விகிதம் 4% என்ற அளவிலும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் விகிதம் 3.35% என்ற அளவிலேயே தொடரும். இதனால் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது’ என்று தெரிவித்தார்.

ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாததால் வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *