இனி தங்கம் வாங்குவது கனவுதான்.. தங்கம் ஒரு சவரன் ரூ.42,992க்கு விற்பனை..!!

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து சவரன் 43 ஆயிரத்தை நெருங்கியது.

சென்னை, ஆகஸ்ட்-6

கொரோனாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பொருளாதாரம் சரிந்துள்ளது. ஆனாலும் தங்கம் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது நடுத்தர மக்களை நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.37,616க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறையாமல் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. 16வது நாளாக நேற்று ஒரு கிராம் ரூ.5,324க்கும், சவரன் ரூ.42,592க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை 17வது நாளாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ரூ.27 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5351க்கும், சவரனுக்கு ரூ.216 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,808க்கும் விற்கப்பட்டது. அதே போல் மாலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்து சவரன் ரூ. 42,992க்கு விற்பனையாகிறது. 

தற்போது தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை நெருங்கியுள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் விரைவில் சவரன் ரூ.50 ஆயிரத்தை தொட வாய்ப்பு உள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *