சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 90,966 ஆக உயர்வு..!!
சென்னை, ஆகஸ்ட்-6

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயினும் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,05,004 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 90,966 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,227 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,811 ஆக குறைந்துள்ளது.
சென்னையில் 58.84% ஆண்களும் 41.16% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேறறு(05.08.2020) மட்டும், 11,785 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.
