உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.89 கோடியாக உயர்வு..!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.11 லட்சத்தை தாண்டியது.

ஆகஸ்ட்-6

சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,11,108 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 18,970,837 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,160,675 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 65,540 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலக அளவில் கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. பிரேசில், இந்தியா அடுத்தடுத்த இடங்களில் இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *