கருணாஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி..!

திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல், ஆகஸ்ட்-5

தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் திண்டுக்கல்லில் தங்கியுள்ள திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கருணாசின் பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது கருணாசுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.இதுவரை கொரோனா தொற்றினால் 4 அமைச்சர்கள் உட்பட 24 எம்எல்ஏக்கள் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மயிலாடுதுறை பூம்புகார் அதிமுக எம்.எல்.ஏ. பவுன்ராஜுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கத்திற்கு கொரோனா உறுதியான நிலையில் பவுன்ராஜுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *