தமிழகத்தில் புதிதாக 5,175 பேருக்கு கொரோனா.. 112 பேர் பலி..!!

தமிழகத்தில் இன்று புதிதாக 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 112 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை, ஆகஸ்ட்-5

தமிழகத்தில் இன்று புதிதாக 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்ந்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,14,815 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 6,031 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 112 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 4,461- ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1,044 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,05,004 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 125 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 54,184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை 29,53,561 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 76.27% ஆக உள்ளது.
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 61,166 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 5,175 பேருக்கு தொற்று உறுதியானது.
  • இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,65,509 ஆண்கள், 1,07,924 பெண்கள், 27 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *