அம்பத்தூரில் திடீரென வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு..!!
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,401 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை, ஆகஸ்ட்-5

சென்னையில் கொரோனா உறுதியான 1,04,027 பேரில் 11,856 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பால் 2,202 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 89,969 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் 58.99% ஆண்கள், 41.01% பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,401 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் விபரம்:-
