இந்தியாவில் கொரோனா பாதிப்பு 19.08 லட்சத்தை தாண்டியது..!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 19.08 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 12.82 லட்சத்தை தாண்டியது.
டெல்லி, ஆகஸ்ட்-5

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் 857 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 19,08,255 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,86,244 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,12,82,215 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 39,795 ஆக உயர்ந்துள்ளது.