உச்சத்தை தொட்ட தங்கம் விலை..!! ஒரே நாளில் சவரன் ரூ. 792 உயர்ந்து ரூ.42,208க்கு விற்பனை..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து ஒரு சவரன் 42,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, ஆகஸ்ட்-5

தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.792 உயர்ந்து ரூ.42,408க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை 99 ரூபாய் அதிகரித்து 5,301 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 792 ரூபாய் உயர்ந்து 42,,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் மளமளவென உயர்ந்து வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 4 ரூபாய் 60 காசுகள் அதிகரித்து ரூ.77.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *