ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து..!

சென்னையில் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ராஜ் பவன் தெரிவித்துள்ளது. சுதந்திர தினத்தின் மாலையில் நடைபெறும் தேநீர் விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னை, ஆகஸ்ட்-3

இதுபற்றி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ;-

“கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கருத்தில் கொண்டு நிகழாண்டு சுதந்திர தின நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முடிவு செய்துள்ளார்.
காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் இன்று ஆளுநருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். அவரது உடல்நிலை சீராக உள்ளது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் அவரைக் கண்காணித்து வருகின்றனர்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *