உடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது, மத்திய அரசு
நாடு முழுவதும் உடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
டெல்லி, ஆகஸ்ட்-3

நாடு முழுவதற்குமான 3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் யோகா, உடற்பயிற்சி மையங்களை ஆகஸ்ட் 5ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், மதுபான விடுதிகளுக்கான தடை நீடிக்கிறது. இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது உடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
- அறிகுறி இல்லாத நபர்களை (ஸ்டாஃப்கள் உள்பட) மட்டுமே அனுதிக்க வேண்டும். முகக்கவசம், முகம் ஷீல்டு அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
- அனைத்து நபர்களும் ஆரோக்யா சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
- சானிடைசர், ஆக்சி மீட்டர் வைத்திருக்க வேண்டும். ஆக்சிஜன் அளவு 95-க்கு கீழ் இருந்தால் அனுமதிக்கக் கூடாது.
- ஆறு அடி சமூக இடைவெளியை பார்க்கிங் உள்பட எல்லா இடத்திலும் கடைபிடிக்க வேண்டும்.
- உபகரணங்கள், பொருட்களை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வதற்கு போதுமான நேரத்தை ஒதுக்கும் வகையில் நபர்களுக்கு தனித்தனித் நேரத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும்.
- யோகா செய்யும் இடங்களில் செருப்புகளோடு செல்ல அனுமதிக்கக் கூடது.