அரசு பேருந்தில் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு…

விழுப்புரம், அக்டோபர்-12

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசுப் பேருந்தில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். 

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் வரும் 21-ம் தேதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அந்தத் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த இரு தொகுதிகளிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணையில் அமர்ந்தும், நடைபயணமாக சென்றும் வாக்கு சேகரித்து வருகிறார். விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட விழுப்புரம் நகரை ஒட்டிய ஸ்டாலின் நகரில், வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது மக்களிடம் குறைகளைக் கேட்ட மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் எந்த ஒரு அடிப்படை பணிகளும் நடைபெறவில்லை எனக் குற்றம்சாட்டினார். அப்போது ஏழு செம்பொன் பகுதியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பேருந்தில் ஏறிய மு.க.ஸ்டாலின், பேருந்தில் பயணம் செய்தவர்களிடம் குறைகளை கேட்டு வாக்கு சேகரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *