பாஜக தலைமை மீது வருத்தம்.. நயினார் நாகேந்திரன் பேச்சால் கட்சியினர் அதிர்ச்சி..!!

தமிழக பாஜக தலைமை மீது வருத்தத்தில் இருப்பதாக அக்கட்சியின் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-3

இதுகுறித்து பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது ;-

தலைமை மீது வருத்தம் இருப்பது உண்மைதான். ஆனால், கட்சி மாறப்போகிறேன் என்று வெளியாகும் செய்தி உண்மையில்லை. அண்மையில் நடைபெற்ற நிர்வாகிகள் நியமனம் வேதனை அளிக்கிறது. நம்பிக்கையோடு பாஜகவிற்கு வந்தவர்களுக்கு அங்கீகாரம் தரப்படவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனுபவமிக்க தலைவர்கள் பாஜகவில் இருப்பது அவசியம். ஆற்காடு முன்னாள் எம்எல்ஏ வி.கே.ஆர் சீனிவாசன் அதிமுகவில் இணைந்ததை தடுத்திருக்க வேண்டும். வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் மீண்டும் திமுகவில் சேர்ந்ததை தடுத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நயினார் நாகேந்திரனின் இந்தக் கருத்து பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *