இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது.

டெல்லி, ஆகஸ்ட்-3

இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 18,03,695 ஆக உயர்ந்துள்ளது. இதில் 11,86 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 5.79 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 38,135 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் 771 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இதுவரை 15,576 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,76,809 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 1,48,843 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 4132 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,96,483 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 56,998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 4004 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,23,317 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 10,356 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *