நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.. இந்திய வானிலை ஆய்வு மையம்

வடக்கு வங்கக் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

டெல்லி, ஆகஸ்ட்-3

வடக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும். 5 நாள் கனமழை பெய்யும் என்பதால் கேரளா, கர்நாடகாவிற்கு ஆரஞ்சு, குஜராத், மகாராஷ்டிராவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு மத்திய மேற்கு, அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *