தமிழகத்தில் ஒரேநாளில் டாஸ்மாக்கில் ரூ.188 கோடிக்கு மது விற்பனை..!!
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று முன்தினம் மட்டும் ரூ.188 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
சென்னை, ஆகஸ்ட்-3

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் வரக்கூடிய 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, இந்த மாதத்துக்கான முழு பொது முடக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) கடைப்பிடிக்கப்பட்டது. அதற்கு முந்தைய தினமான சனிக்கிழமையன்று மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று முன்தினம் மட்டும் ரூ.188 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
அதிகபட்சமாக மதுரையில் ரூ.44 கோடிக்கும், திருச்சியில் ரூ.42 கோடிக்கும், சேலத்தில் ரூ.40 கோடிக்கும், கோவையில் ரூ.38 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. குறைந்த பட்சமாக சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.21 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.