ஐபிஎல் டி20 கிரிக்கெட் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10 வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மும்பை, ஆகஸ்ட்-2

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்த ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. பிசிசிஐ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி ஐ.பி.எல் தொடரை செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. துபாய், ஜார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் போட்டி நடைபெறும் எனவும் ஐ.பி.எல் குழு தலைவர் பிரிஜீஷ் படேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வரும் 26-ந்தேதி இந்திய வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்படுவார்கள், போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் ஐபிஎல் லீக்கிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.