ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 52 ஆண்டுகளாக 150 ஆறுகளில் புனித நீர் சேகரித்த சகோதரர்கள்..!!

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 151 மேற்பட்ட நதிகளில் இருந்து வயதான சகோதரர்கள் இருவர் தண்ணீர் எடுத்து வந்துள்ளனர்.

அயோத்தி, ஆகஸ்ட்-2

ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5-ம்தேதி அயோத்தியில் நடைபெறுகிறது. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்பட 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள இருக்கிறார்கள். நீண்ட காலத்திற்குப்பிறகு பிரச்சினை ஓய்ந்து ராமன் கோவில் கட்டப்பட இருக்கிறது. இதனால் இந்தியாவில் உள்ள புனித இடங்களில் இருந்து மணல்கள், ஆறுகளில் இருந்து புனித நீர் சேகரித்து அயோத்திக்கு அனுப்பட்டு வருகிறது.

இதனிடையே, கடந்த 1968-ம் ஆண்டில் இருந்து ராமர் கோவில் கட்டுவதற்காக சகோதரர்கள் ராதே சியாம் பாண்டே மற்றும் ஷாப்த் வைகியானிக் மகாகவி திரிபாலா ஆகியோர் புனித இடங்களில் இருந்து மணல் மற்றும் ஆறுகளில் இருந்து புனித நீர் சேகரித்து வருகின்றனர். இலங்கையில் இருந்து 8 ஆறுகள், மூன்று கடல்களில் இருந்து புனித நீர்களும் 16 இடங்களில் இருந்து மணல்களும் சேகரித்துள்ளனர்.

மேலும் இந்தியா முழுவதில் இருந்து 150 ஆறுகளில் இருந்து புனித நீர் சேகரித்துள்ளார். இவைகளை சகோதரர்கள் இருவரும் அயோத்தி கொண்டு சேர்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *