அயோத்தி அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை

அயோத்தி அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநில கமாண்டோ போலீசார் 200 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

லக்னோ, ஆகஸ்ட்-2

அயோத்தியில் வருகிற 5-ந்தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உத்தரபிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட உள்ள உத்தரப்பிரதேச மாநில கமாண்டோ போலீசார் 200 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியுடன் மேடையில் 4 பேர் மட்டுமே அமர அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *