மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி டிஸ்சார்ஜ்..!
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
டெல்லி, ஆகஸ்ட்-2

காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி (வயது 73) கடந்த 30-ம் தேதி இரவு டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தொடர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதனை அடுத்து இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மேலும், சோனியா காந்தியின் உடல் நிலை சீராக உள்ளதாக தனியார் மருத்துவமனையின் தலைவர் டி.எஸ்.ராணா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் 30-ஆம் தேதி இரவு 7 மணிக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனைகள் முடிந்த பிறகு உடல்நிலை சீரானதும் இன்று பிற்பகல் 1 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.