லண்டனில் காற்றாலையை பார்த்து பிரமித்த எடப்பாடியார்

லண்டன் ஆகஸ்ட் 31

லண்டனில் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிஅங்குள்ள அரசு காற்றாலை மின் உற்பத்தி குறித்து ஆய்வு செய்து பிரமித்துப்போனார். 

பிரிட்டனில் சுஃபோல்க் நகரில் ஐ.பி.ஸ்விட்ச் – ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி மின்சார கட்டமைப்புகளை முதல்வர் பழனிசாமி இன்று பார்வையிட்டார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் சென்று இருந்தார். பின்னர் அங்குள்ள அதிகாரிகளை சந்தித்துப்பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி மின்சார கட்டமைப்புகள் குறித்து கேட்டறிந்தார்.அதற்கான பரமாரிப்பு செலவுகள் மற்றும் பயன்பாடுகள் குறித்தும் அவருக்கு அங்குள்ள அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண விவரங்கள் உடனுக்குடன் அவரது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியயோவுடன் வெளியிடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *