கொரோனாவில் இருந்து மீண்டார், அமிதாப் பச்சன்..!
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் குணமடைந்தார். அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பியதாக அவரது மகன் அபிஷேக் தகவல் தெரிவித்துள்ளார்.
மும்பை, ஆகஸ்ட்-2

பாலிவுட்டில் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு இன்று கொரோனா நெகடிவ் என முடிவுகள் வந்துள்ளது.
இதனை அவரது மகன் அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சீனியர் பச்சன் குணமடைந்து வீடு திரும்பினார். அமிதாப் பச்சன் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்த ரசிகர் படைகளுக்கும், இக்கட்டான சூழலில் அவர்கள் அளித்த ஆதரவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த மாதம் 11-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட அபிஷேக் பச்சன் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த மாதம் 27-ஆம் தேதி அமிதாப் பச்சனின் மருகள் ஐஸ்வர்யா ராய், அவரது பேத்தி ஆராத்யா ஆகியோர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.