உத்தரபிரதேச மாநில அமைச்சர் கமலா ராணி கொரோனாவால் உயிரிழப்பு

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று உத்தரப் பிரதேச மாநில தொழிற்கல்வித்துறை அமைச்சர் கமலா ராணி வருண்(62) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

லக்னோ, ஆகஸ்ட்-2

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் கமலா ராணி வருண் தொழிற்கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்தார். 62 வயதான இவருக்கு கடந்த மாதம் ஜூலை 18- ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து லக்னோவில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பத்து நாள்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து கமலா ராணி இறப்புக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உத்தரபிரதேச அரசில் எனது சகா, அமைச்சரவை அமைச்சர் திருமதி கமல் ராணி வருண் அவர்களின் அகால மரணம் குறித்த தகவல்கள் கவலை அளிக்கின்றன. அர்ப்பணிப்புள்ள ஒரு பொதுத் தலைவரை அரசு இன்று இழந்தது. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல். கடவுள், புறப்பட்ட ஆத்மாவுக்கு உங்கள் ஸ்ரீ காலடியில் ஒரு இடத்தை வழங்குங்கள், என கூறியுள்ளார்.

முன்னதாக, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் இன்று அயோத்தி சென்று ராமர் கோவில் பூமி பூஜை குறித்து ஆய்வு செய்ய இருந்தார். கேபினட் அமைச்சர் உயிரிழந்ததை தொடர்ந்து அயோத்தி பயணத்தை அவர் ரத்து செய்தார் என்பது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *