தமிழகத்தில் புதிதாக 5875 பேருக்கு கொரோனா பாதிப்பு..!
தமிழகத்தில் மேலும் 5875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,57,613-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை, ஆகஸ்ட்-2

தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய தரவுகள் அடங்கிய மாநில சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,875 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ளவர்களில் மட்டும் உறுதி செய்யப்பட்டவர்கள் 5,811 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 64 பேர்.
- தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,96,483 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 5,517 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
- தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 98 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 4,132- ஆக உயர்ந்துள்ளது.
- சென்னையில் இன்று ஒரே நாளில் 1,065 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,01,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 122 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 56,998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- தமிழகத்தில் இதுவரை 27,79,062 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
- பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 68 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 76.27% ஆக உள்ளது.
- தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60,344 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 5875 பேருக்கு தொற்று உறுதியானது.
- இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,56,140 ஆண்கள், 1,01,446 பெண்கள், 27 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.