மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா.. பாஜகவினர் அதிர்ச்சி..!!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பாஜகவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி, ஆகஸ்ட் -2

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றவுடன், நான் சோதனை செய்ய முடித்தேன். மிக லேசான அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதியானது. நான் நலமுடன் இருக்கிறேன். ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட நீங்கள் அனைவரும் தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்தி கொள்ளவும் என குறிப்பிட்டுள்ளார்.