தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி..!!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, ஆகஸ்ட்-2

ஆளுநர் மாளிகையில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 84 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் 38 பேருக்கு பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆளுநர் உதவியாளர் தாமசும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரிசோதனைக்காக சென்றிருந்தார். இந்நிலையில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், தொற்றுக்கான அறிகுறி பெரிய அளவிற்கு இல்லாததாலும், ஆளுநரின் உடல்நிலை சீராக உள்ள காரணத்தினாலும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தன்னை தானே ஆளுநர் பன்வாரிலால் தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *